அது என்கேஜ்மென்ட்டுனு எங்களுக்கே தெரியாது!- ஆனந்த மழையில் ஆலியா மானஸா – சஞ்ஜீவ் ஜோடி

அது என்கேஜ்மென்ட்டுனு எங்களுக்கே தெரியாது!- ஆனந்த மழையில் ஆலியா மானஸா – சஞ்ஜீவ் ஜோடி

உ.சந்தானலெட்சுமி

சின்னத்திரையில் ‘சரவணன் – மீனாட்சி’ தம்பதிக்குப் பிறகு, ரசிகர்களின் ஃபேவரைட் க்யூட் தம்பதியாக வலம் வருகிறது ராஜா ராணி (சஞ்ஜீவ் – ஆலியா மானஸா) ஜோடி. இவர்கள் சமீபத்தில், சின்னத்திரை விருது விழா நிகழ்ச்சியில் மோதிரம் மாற்றி திடீர் நிச்சயம் செய்துகொண்ட நிகழ்வு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கார்த்திக் - செம்பாவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இந்த ஜோடி, காதலால் ஒருவர் மனதில் ஒருவர் மையம் கொண்டதை அறிந்த ரசிகர்கள், இருவருக்கும் வாழ்த்துப் பூங்கொத்துகளை அனுப்பியபடியே இருக்கிறார்கள். நிச்சயதார்த்தப் பூரிப்புடன், சமீபத்தில் சிங்கப்பூருக்கு விசிட் அடித்த சந்தோஷம் இருவரையும் இன்னும் அழகாக்கிக் காட்டுகிறது.

வெளிர் பச்சை நிறப் புடவையில் கண்ணைச் சிமிட்டி, தலையை அசைத்துச் சிரிக்கிறார் ஆலியா. மவுனப் புன்னகையுடன் கைகட்டி அமர்ந்திருக்கிறார் சஞ்ஜீவ். வெல்கம் ஹோட்டலின் வெளிச்ச நதியில் நனைந்தபடி கண்களால் பேசிக்கொண்டிருந்த ஜோடியின் நடுவே கரடியாகப் புகுந்தேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in