விஜய் சேதுபதி சார் தந்த அட்வைஸ்!- ‘சூப்பர் டீலக்ஸ்’ ராசுக்குட்டி அஸ்வந்த்

விஜய் சேதுபதி சார் தந்த அட்வைஸ்!- ‘சூப்பர் டீலக்ஸ்’ ராசுக்குட்டி அஸ்வந்த்

உ.சந்தானலெட்சுமி

“அப்படித்தாண்டா கம்னாட்டி... இவ்ளோ வருஷம் எங்கள வுட்டுட்டு போயிருந்தீயே அப்ப நாங்க என்ன பண்ணுவோம்னு யோசிச்சு பாத்தியா ஒரு நிமிஷம். நீ ஒண்ணும் யோசிக்காம பண்ணல, உன்னை எல்லாரும் கிண்டல் பண்றாங்கன்னு நீ போற, ஆனா, அம்மாவும் நானும் உன்னை ஏதாவது ஒரு வார்த்தை சொன்னமா... நீ ஆம்பளையா இரு பொம்பளையா இரு. ஆனா, எங்ககூட இருந்து தொலையேன்...” இந்த டயலாக்கில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதியை மட்டுமல்ல, படம் பார்க்கும் அனைவரின் கண்களையும் குளமாக்கிவிடுகிறான் நடிப்புச்சுட்டி ராசுக்குட்டியாக வலம் வரும் அஸ்வந்த். படம் பார்த்த அனைவருமே அப்ளாஸை மட்டுமல்ல, வாழ்த்து மலர்களையும் அஸ்வந்துக்குத் தூவி வருகின்றனர். ஒருபுறம் சூப்பர் டீலக்ஸில் நடிப்பிலும் டயலாக்கிலும் மிரட்டுகிறான் என்றால் மறுபுறம் ‘ஐரா’வில் பேயாக வந்து பயமுறுத்துகிறான். ஒரே சமயத்தில் டபுள் டமாக்காவாக அசத்தியிருக்கும் அஸ்வந்தை சந்தித்து வாழ்த்திவிட்டு வரலாம் என அவன் வீட்டு காலிங்பெல்லை அழுத்தினேன்.

இரண்டு கதவுகளையும் ஒரு சேர திறந்தபடி நடுவில் நின்றுகொண்டு, “யார் நீங்க... யார் வேணும்?” என்று மழலைக்கே உரித்தான குரலில் கேள்விகளைத் தொடுக்கிறான் பொடியன் அஸ்வந்த். அவனைப் பார்த்ததுமே சூப்பர் டீலக்ஸின் காட்சிகள் நிஜத்தில் என் கண்முன்னே நகர்கின்றன. “நான் உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கேன்” என்று சொன்னதும், “அய் ஜாலி” என்றவன், “இருங்க டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்” என்றபடியே அம்மாவை அழைத்தபடி உள்ளே ஓடினான்.

நிமிடங்களில் நீலநிற ஜீன்ஸ் டீசர்ட்டில் அழகு சகிதமாக வந்து அமர்ந்தவன், “நீங்க கேள்வி கேட்கிறீங்களா... இல்ல நான் கேட்கவா?” என்று சேட்டை செய்தான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in