தீயா வேலை செய்யணும் குமாரி!

தீயா வேலை செய்யணும் குமாரி!

`தமிழ் படம் 2’வுக்கு பிறகு ஐஸ்வர்யா மேனன் தமிழுக்கு இடைவெளி தந்துவிட்டு தெலுங்கிலும், மலையாளத்திலும் பிஸியாகி விட்டார். அம்மணியின் கைவசம் இப்போது தெலுங்கில் மூன்று படங்களும் மலையாளத்தில் இரண்டு படங்களும் இருக்கின்றன.

தீயா வேலை செய்யணும் குமாரி!

சிம்பு, பிரபுதேவா எனத் தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்தடுத்து சறுக்கல்களைச் சந்தித்த நயன்தாராவுக்கு விக்னேஷ்சிவனின் என்ட்ரிக்குப் பிறகு எல்லாம் சுபமே. சினிமா வாழ்க்கையில் அடுத்தடுத்து ஹிட்களும், தனி ஆவர்த்தனம் செய்கிற நாயகி அந்தஸ்தும் ஒரு புறம் என்றால், பர்சனல் வாழ்க்கையில் ஒவ்வொரு திருநாளையும் நயன் - விக்னேஷ்சிவன் ஜோடி ரசித்து அனுபவித்து வாழ்கிறார்கள். 2019 புத்தாண்டு தினத்தை அமெரிக்காவில் கொண்டாடியிருக்கிறது இந்த ஜோடி!
நயனுக்கு நைன்டீனும் சிறப்பாக அமையட்டும்!

`ஓம்’, ‘கென்னடி கிளப்’, ‘ராக்கி’ என அடுத்தடுத்து மூன்று படங்களில் பிஸியாக இருக்கிறார் பாரதிராஜா. “என் இனிய தமிழ் மக்களுக்கு ஏதாவது பண்ணணும்யா” என்று இந்த வயதிலும் தீவிரமாய் இயங்கி வரும் பாரதிராஜா, ‘ராக்கி’ படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து வருகிறார்.
‘குற்றப் பரம்பரை’யை எப்ப எடுக்கப் போறீங்க சார்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in