சினி பிட்ஸ்

சினி பிட்ஸ்

எக்கச்சக்க கெட்டவார்த்தைகள், ஆண்ட்ரியாவின் முதலிரவுக் காட்சிகள் எல்லாம் இருந்தும், வசூல் ரீதியாக ‘வட சென்னை’ வட்டமடித்துப் படுத்துக்கொண்டதால் ‘வடசென்னை’ பார்ட் 2-வுக்கு இன்னும் பச்சைக்கொடி காட்டாமல் இருக்கிறார் தனுஷ். ‘முதல் பாகத்தில் விட்டதையும் சேர்த்தே இரண்டாவது பாகத்தில் பிடிச்சுடலாம்’ என்று உற்சாகம் கொடுத்து வருகிறாராம் வெற்றிமாறன்.

இதுமாதிரியான ‘பெரிய கதை’களை ‘வெப் சீரிஸாக’ எடுக்கலாமே?!

போர் வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்ட ரஜினி, தொடர்ந்து நடிக்கப் போகிறார். ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு, அடுத்த படம் ஏ.ஆர்.முருக தாஸ் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், கதை விஷயத்தில் ரொம்பவே கெடுபிடி காட்டுகிறார் ரஜினி. இதுவரை முருகதாஸ் சொன்ன நான்கு கதைகளையுமே நிராகரித்திருக்கிறார்.
2.0-ல என்ன கதை இருந்துச்சி... அதை முதல்ல சொல்லுங்கய்யா?!

‘சர்கார்’ ஃபர்ஸ்ட் லுக்கில், விஜய் புகைபிடிக்கும் காட்சிக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவிக்க அந்த ஃபர்ஸ்ட் லுக்  நீக்கப்பட்டது. அதன்பிறகு, சர்ச்சை கிளம்ப வேண்டும் என்றே திட்டமிட்டு, ஸ்ரேயா, ஹன்சிகா போன்ற நடிகைகள் புகைப்பிடிக்கும் காட்சிகளை வெளியிட்டபோது பெரிதாக எந்தச் சலசலப்பும் ஏற்படவில்லை. லேட்டஸ்டாக, நடிகை அமலாபால், புகையை ஊதித் தள்ளுகிற புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
ஆம்பளைங்கள மட்டும்தான் கண்டிப்பீங்களா ‘வருங்கால சிஎம்' சார்?!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in