வுட்வர்ட்ஸ் முதல் 2.0 வரை – டப்பிங் ரவீணா

வுட்வர்ட்ஸ் முதல் 2.0 வரை – டப்பிங் ரவீணா

நயன்தாரா, சமந்தா, ஸ்ரீதிவ்யா,ஏமி ஜாக்சன், மடோனா  எல்லாம் நாம் திரையில் பார்க்கிற கேக் என்றால்... சர்க்கரையாக நாம் கேட்கிற குரல் ரவீனா.  சீறல், செல்லச் சிணுங்கல் என்று காட்சிக்கு ஏற்ற ‘மாடுலேஷனில்’ பின்னணிக் குரல் கொடுத்து, நட்சத்திரங்களின் உதட்டசைவுக்கு உயிர் கொடுப்பது அத்தனை சாதாரண காரியமில்லை. 

இதுவரை 70 படங்களுக்கு  மேல் டப்பிங் கலைஞராகப் பணியாற்றியிருக்கும் ரவீனாவுக்கு இந்தத் திறமை தாய்வழிச் சொத்து! ‘அமர்க்களம்’, ‘தில்’ உள்ளிட்ட 1500 படங்களுக்கும் மேல் டப்பிங் கலைஞராகப் பணியாற்றி  5 மாநில அரசு விருதுகளை பெற்றுள்ள ஸ்ரீஜா ரவியின் மகள்தான் ரவீனா.

‘நீங்க வாய்ஸ் கொடுத்த நடிகைகள் உங்களைப் பாராட்டியிருக்கிறார்களா’ என்று பேசத் தொடங்கியதுதான் தாமதம்  ‘என்ன இப்படி கேட்டுட்டீங்க’ என்று ஒரு  பட்டியலையே வாசிக்கத் தொடங்கிவிட்டார். 

Related Stories

No stories found.