
நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'ஃபார்ஸி' இந்தி வெப் சீரிஸ் பார்த்து கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்த 5 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 19.74 லட்சம் போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி காவல் துறையின் சிறப்புக்குழு, கள்ளநோட்டு அச்சடித்தது தொடர்பாக 5 பேரை இன்று கைது செய்தது. அவர்களிடம் இருந்து ரூ.19.74 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகளை (எஃப்ஐசிஎன்) கைப்பற்றியது. சகுர் முகமது மற்றும் லோகேஷ் யாதவ் என அடையாளம் காணப்பட்ட இருவர் டெல்லி அக்ஷர்தாம் பகுதியில் இருந்தும், மேலும் மூன்று பேர் ராஜஸ்தானில் இருந்தும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்," மாநிலங்களுக்கு இடையேயான கள்ளநோட்டுக்களை மாற்றும் கும்பலிடம் இருந்து 500 ரூபாய் போலி ரூபாய் நோட்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான 'ஃபார்ஸி' வெப் சீரிஸ் பார்த்து கள்ள நோட்டுக்களை அச்சடித்ததாக தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவர் அளித்த தகவலின் அடிப்படையில், ராஜஸ்தானின் அல்வாரில் இருந்து ஹிமான்ஷு ஜெயின், ஷிவ் லால் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அஜ்மீரில் ஒரு பிரிண்டிங் யூனிட்டை அமைத்து கள்ள நோட்டுக்களை அச்சடித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து போலி ரூபாய் நோட்டுக்கள், மடிக்கணினிகள், பிரிண்டர்கள், லேமினேஷன் இயந்திரங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் மற்றும் கருவிகள், வெட்டப்பட்ட தாள்களில் இருந்த ரூ.8 லட்சம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளோம். மேலும் சிம் கார்டுகள், செல்போன்கள் மற்றும் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்" என்றனர்.
இந்தியில் வெளியான 'ஃபார்ஸி' வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்
விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!