நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ’இரவின் நிழல்’ படத்தில் மாயவா தூயவா பாடலை பாடிய ஸ்ரேயா கோஷல் சிறந்த பின்னணி பாடகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இன்று மாலை 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த படங்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ’இரவின் நிழல்’ படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மாயவா தூயவா பாடலைப் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.