ரசிகர்கள் வருகை குறைவு: 400 சினிமா தியேட்டர்கள் திடீர் மூடல்

ரசிகர்கள் வருகை குறைவு: 400 சினிமா தியேட்டர்கள் திடீர் மூடல்

ரசிகர்கள் வருகை குறைவானதால் சுமார் 400 தியேட்டர்கள் திடீரென்று மூடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் சினிமா டிக்கெட்டுகளின் விலை குறைக்கப்பட்டதால், தியேட்டர்களை மூடி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தியேட்டர் உரிமையாளர் மற்றும் நடிகர்கள் மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஆந்திராவில் உள்ள அனைத்து தியேட்டர்களும் அரசின் இணையதளம் மூலமே டிக்கெட்களை விற்பனை செய்யவேண்டும் என்றும் ஆன்லைனில் டிக்கெட்களை வழங்கும் வசதி இல்லாத தியேட்டர்கள், அதற்கான கட்டமைப்பை விரைவில் உருவாக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்தனர். அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இதற்கிடையே, ரசிகர்களின் வருகை குறைந்ததை அடுத்து, ஆந்திராவில் 400 தியேட்டர்கள் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஒரு காட்சிக்கு, ஏசி தியேட்டர் பராமரிப்புக்கு 5,000 ரூபாயும் ஏசி அல்லாத தியேட்டர்களுக்கு 2,000 ரூபாயும் தேவைப்படுகிறது. இதுதவிர மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளும் இருக்கின்றன. ஆனால், சமீப காலமாக தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை குறைவாக இருக்கிறது. வெறும் 10, 15 பேர் மட்டுமே வருதாகக் கூறப்படுகிறது.

இதனால், தியேட்டர்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி நேற்று முதல் 400 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தசரா அல்லது பொங்கல் பண்டிகையின்போது முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. அதுவரை தியேட்டர்களை மூடி வைக்க முடிவு செய்துள்ளனர். இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in