நடிகர் விஜய்யின் 'வாரிசு' படத்தின் 3-வது போஸ்டர் வெளியீடு!

நடிகர் விஜய்யின் 'வாரிசு' படத்தின் 3-வது போஸ்டர் வெளியீடு!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் 3-வது போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

நெல்சன் இயக்கிய ’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றும் ஷாம், சரத்குமார், பிரபு உட்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இதன் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நடந்து வருகிறது.

இதற்கிடையே நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி படத்துக்கு ’வாரிசு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், 6 மணி நேரத்துக்கு முன்பு வாரிசு படத்தின் 2-வது போஸ்டர் வெளியிட்டது படக்குழு.

இந்த போஸ்டர் வைரலாகியுள்ள நிலையில், தற்போது படத்தின் 3-வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக தலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்யின் பிறந்தநாளையொட்டி அடுத்தடுத்து வாரிசு படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகியிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in