விஷாலின் ‘லத்தி’ படத்துக்கு 35 நாட்கள் கிளைமாக்ஸ்

5 மொழிகளில் தயாராகிறது
விஷால்
விஷால்

விஷால் நடிக்கும் ’லத்தி’ படத்துக்காக, 35 நாட்கள் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்படுகிறது.

விஷால், ஆர்யாவுடன் நடித்த 'எனிமி' படத்துக்குப் பிறகு 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்துள்ளார் விஷால். அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் ’லத்தி’ படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகிறது.

விஷால்
விஷால்

இதில் போலீசாக நடிக்கும் விஷாலுக்கு நாயகியாக, சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு 35 நாட்கள் நடக்கிறது. இதில் சண்டைக்காட்சிகள் இடம்பெறுகின்றன. இதற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. பீட்டர்ஹெயின் இந்த சண்டைக்காட்சியை அமைத்து வருகிறார். இதில் சுமார் 200-க்கும் அதிகமான சண்டைக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in