மகளைப் பார்க்க 4 முறை தப்ப முயற்சி: ஒரு கொலைக் குற்றவாளியின் 30 ஆண்டு சிறை வாழ்க்கை சினிமாவாகிறது!

மகளைப் பார்க்க 4 முறை தப்ப முயற்சி:  ஒரு கொலைக் குற்றவாளியின் 30 ஆண்டு சிறை வாழ்க்கை சினிமாவாகிறது!

கொலைக் குற்றத்தில் 30 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் வாழ்க்கை சினிமாவாகிறது.

கேரள மாநிலம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி. முப்பது வருடத்துக்கு முன், இவரும் இவர் நண்பரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நண்பரை ஒருவர் அடித்துள்ளார். அதைக் கேள்வி கேட்டார் சிவாஜி. வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்தது. பின்னர் முண்டூருக்கு தப்பிய சிவாஜி, அங்கு சத்யபாமா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அஜிதா என்ற பெண் குழந்தை பிறந்தது. கொலைக் குற்றத்தில் சிவாஜி கைது செய்யப்பட, சத்யபாமா தற்கொலை செய்துகொண்டார். குழந்தை, தாத்தா, பாட்டியுடன் வளர்ந்து வந்தது.

இதற்கிடையே மகளைப் பார்க்க பலமுறை பரோல் கேட்டும் சிறையில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் நான்கு முறை சிறையில் இருந்த தப்ப முயன்று பிடிபட்டார் சிவாஜி. கரோனா காலத்தில் மட்டுமே அவருக்கு பரோல் கிடைத்தது. பின்னர் மீண்டும் சிறைக்குச் சென்றார். முப்பது வருடங்களை சிறையில் கழித்த அவர், இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மகளுக்குத் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில், தான் செய்தது தவறு என்று வருந்துகிறார் சிவாஜி. மிச்ச வாழ்க்கையை குடும்பத்துடன் வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இவருடைய வாழ்க்கை கதை சினிமாவாகிறது. முன்னணி மலையாள நடிகர் ஒருவர சிவாஜி கேரக்டரில் நடிக்க இருக்கிறார். படத்தின் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in