படம் வெளியான 3 நாட்களில் 3 ஆயிரம் கோடி வசூல்: ஆச்சரியப்பட வைத்த `அவதார்2'

படம் வெளியான 3 நாட்களில் 3 ஆயிரம் கோடி வசூல்: ஆச்சரியப்பட வைத்த `அவதார்2'

`அவதார்2' திரைப்படம் வெளியான மூன்று நாட்களிலும் 3000 கோடி வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அவதார்2. அதிக பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் கடந்த 16-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவதார் முதல் பாகம் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது. இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸானது.

இந்த நிலையில், அவதார்2 திரைப்படம் வெளியான மூன்று நாட்களிலும் 3000 கோடி வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது. இந்த படம் வெளியான மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படம் வெளியான மூன்று நாட்களில் 3000 கோடி வசூலித்திருப்பதாகவும், இந்தியாவில் இந்த படம் மூன்று நாட்களில் 160 கோடியே வசூலித்து இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in