பிரபல சின்னத்திரை நடிகைக்கு 2-வது திருமணம்: சினிமா தயாரிப்பாளரின் கரம் பிடித்தார்

பிரபல சின்னத்திரை நடிகைக்கு  
2-வது திருமணம்:  சினிமா தயாரிப்பாளரின் கரம் பிடித்தார்

தொலைக்காட்சி தொகுப்பாளரும், சின்னத்திரையின் பிரபல நடிகையுமான மகாலட்சுமி திரைப்பட தயாரிப்பாளரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான நடிகை மகாலட்சுமி இதன் பின் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். 'செல்லமே', 'அவள்', 'வாணி ராணி', 'ஆபீஸ்', 'பிள்ளைநிலா' உட்பட்ட தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தார். கடந்த 2016-ம் ஆண்டு அவர் அணில் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 'தேவதையை கண்டேன்' என்ற சின்னத்திரை தொடரில் வில்லியாக மகாலட்சுமி நடித்த போது நடிகர் ஈஸ்வருடன் பழக்கம் ஏற்பட்டது. ஈஸ்வரின் மனைவியும், நடிகையுமான ஜெயஸ்ரீ இவர்களின் நட்பை கள்ளத்தொடர்பு என்று குற்றம் சாட்டினார். அத்துடன் தற்கொலைக்கும் முயன்றார்.‘ இதையடுத்து ஜெயஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வந்தார்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவரை மகாலட்சுமி திடீரென 2-வது திருமணம் செய்துள்ளார். இது குறித்து ரவீந்திரன் தனது முகநூல் பக்கத்தில் மகாலட்சுமியிடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளார். அதில், ‘‘மகாலட்சுமி மாதிரி ஒரு பெண் கிடைத்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையில் கிடைச்சா" என்று பதிவிட்டுள்ளார். மகாலட்சுமியை மணந்துள்ள தயாரிப்பாளர் ரவீந்திரன் தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா?’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in