மார்ச் 18-ல் திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழா

மார்ச் 18-ல் திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழா

திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழா, மார்ச் 18 ஆம் தேதி தொடங்குகிறது.

ஒவ்வொரு வருடமும் திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் மாதம் நடத்தப்படும். கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட வேண்டிய 26-வது சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், மார்ச் 18ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை இந்த விழா நடைபெறும் என்று இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விழாவில் ஆப்கானிஸ்தான், மியான்மர், வியட்நாம் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 180 படங்கள் திரையிடப் படுகின்றன. திருவனந்தபுரம் நிஷாகந்தி அரங்கில் மார்ச் 18ம் தேதி மாலை 6 மணியளவில், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் விழாவை தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in