ஆச்சரியம்: `கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ எடிட்டருக்கு வயது 19 தான்!

ஆச்சரியம்: `கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ எடிட்டருக்கு வயது 19 தான்!

`கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படத்தின் எடிட்டருக்கு வயது 19 தான் என்ற ஆச்சரிய தகவல் தெரியவந்துள்ளது.

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள படம் 'கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யாஷ் நடிக்க, அவர் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசை அமைத்துள்ளார். 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு, தமிழில் இதை வெளியிடுகிறார். இந்தப் படத்துக்கு வட இந்தியாவிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீலுடன் உஜ்வால் குல்கர்னி
இயக்குநர் பிரசாந்த் நீலுடன் உஜ்வால் குல்கர்னி

அட்வான்ஸ் புக்கிங்கிலும் இந்தப் படம் வட இந்தியாவில் சாதனை படைத்துள்ளது. அதனால் ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூலை இந்தப் படம் முறியடிக்கும் என்கிறார்கள். இதற்கிடையே இந்தப் படத்தின் எடிட்டர் பற்றி ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்துக்கு உஜ்வால் குல்கர்னி என்பவர் எடிட் செய்துள்ளார். அவருக்கு வயது 19 வயதுதான் என்ற ஆச்சரியத்தை படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து சமூக வலைதளத்தில் அவரை அதிகமானோர் தேடி வருகின்றனர்.

உஜ்வால் குல்கர்னி பணியாற்றிய குறும்படங்கள் மற்றும் `கே.ஜி.எஃப் சாப்டர் 1' பட டிரைலருக்கு ரசிகராக அவர் எடிட் செய்ததை கண்டு ஆச்சரியப்பட்ட இயக்குநர் பிரசாந்த் நீல், இந்த பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in