2 வாரத்தில் 4 சம்பவம்... 18 வயது மாடல் தூக்கிட்டு தற்கொலை: தொடரும் சோகம்!

2 வாரத்தில் 4 சம்பவம்... 18 வயது மாடல் தூக்கிட்டு தற்கொலை:  தொடரும் சோகம்!

பிரபல மாடலும் மேக்கப் கலைஞருமான 18 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள கசபாவை சேர்ந்தவர் சரஸ்வதி தாஸ். மேக்கப் கலைஞரும், மாடலுமான இவர் அம்மா மற்றும் பாட்டி அரவணைப்பில் வசித்து வந்தார். தனது பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு டியூஷனும் எடுத்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை சரஸ்வதி தாஸின் தாயாரும் பாட்டியும் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர் தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில்தான் அவர் தற்கொலைச் செய்துகொண்ட தகவல் தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மஞ்சுஷா, பிதிஷா, பல்லவி டே
மஞ்சுஷா, பிதிஷா, பல்லவி டே

கொல்கத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை, மாடல் மஞ்சுஷா, தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அதே போல, அவர் தோழி பிதிஷா டி மஜும்தார் தற்கொலை செய்துகொண்டார். மே 15-ம் தேதி நடிகை பல்லவி டே தனது குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கொல்கத்தாவில் கடந்த 2 வாரங்களில் மட்டும், சரஸ்வதி தாஸுடன் சேர்த்து 4 மாடல்கள் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நடக்கும் தற்கொலைகள் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in