
நடிகை சமீரா ரெட்டி தனது குழந்தை பிறப்புக்கு பிறகான மன அழுத்தம் குறித்து பகிர்ந்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ‘வாரணம் ஆயிரம்’ படம் மூலமாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. கடந்த 2014-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்து இரண்டு குழந்தை இருக்கிறது. சினிமாவுக்கு சிறிய பிரேக் கொடுத்து இருப்பதாகவும் விரைவில் திரும்ப வருவேன் எனவும் சொல்லி இருந்தார் சமீரா. மேலும் தன்னுடைய உடல் எடை குறித்து எதிர்கொண்ட சவால்கள், அதில் இருந்த அழுத்தம் அதில் இருந்து மீண்டு வந்தது என பல விஷயங்களை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது முதல் குழந்தை பிறகு இருந்த மன அழுத்தம், அதில் தனக்கு இருந்த விழிப்புணர்வு, மீண்டு வந்தது ஆகியவை குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார் சமீரா.
அந்த பதிவில் அவர் பேசி இருப்பதாவது, "மனநலம் என்பது பார்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அதை நம்மால் உணர முடியும். மனநலன் தொடர்பான விழிப்புணர்வு நம் உடல் நலம் மற்றும் மன நலன்கள் தொடர்புடையது. உங்கள் மனநலன், யோசனை, மன அழுத்தம், பயம், Bipolar Disorder, PPD போன்றவை மன நலன் பாதிக்கப்படுவதற்கான அறிகுறி. எனக்கு குழந்தை பிறப்புக்கான மன அழுத்தம் என்பது கடினமான ஒன்றாகவும் அதை நான் எதிர்கொள்ள முடியாதவளாகவும் இருந்தேன். ஏனெனில், எனக்கு அது குறித்தான எந்த ஒரு விழிப்புணர்வுமே இல்லாமல் இருந்தது.
நான் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் நான் மன அழுத்தத்தால் மிகவும் சோர்வாக இருந்த சமயத்தில் எடுத்தது. என்னுடைய முதல் குழந்தை பிறந்ததும் நான் எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. இப்பொழுதும் இது போன்று எனக்கு சோர்வான சமயங்கள் உண்டு. ஆனால், அதுதான் என்னை இன்னும் அதிகமாக அதில் இருந்து மீண்டு வர ஊக்குவிக்கிறது. என்னை போன்று இருப்பவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதற்கும் என்னை உந்துகிறது.
நீங்கள் தனியாக இல்லை. இது போன்ற சமயங்களில் ஒருவொருக்கவர் ஆறுதலாக இருப்பது மிக முக்கியம். நமக்கும் மற்றவர்களுக்கும் இது போன்ற சமயங்களில் உதவுவது எப்படி?
* உங்களை நீங்கள் பார்த்து கொள்ளுங்க. உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்.
* எந்தவொரு ஜட்ஜ்மெண்ட்டுக்கும் போகாமல் மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள்
* உங்கள் கதைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
* உங்களுக்கு என்று ஒரு கூட்டத்தை வைத்து கொண்டு அவர்களுடன் ஆரோக்கியமான பேச்சுகளை வளர்த்து கொள்ளுங்கள்
* ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணி நேரம் தூங்குவதை கண்டிப்பான பழக்கமாக வைத்து கொள்ளுங்கள்
* மொபைல், டிவி, கணினி என குறைந்த அளவிலான ‘ஸ்கிரீன் டைம்’ என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு தொந்தரவாக இருப்பதை குறித்து சிந்திக்க அமைதியான நேரத்தை செலவிடுங்கள்
* என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது பற்றி கவனமாக இருங்கள்
* குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்
* உங்களது எண்ணங்களை எழுதி வையுங்கள்
* நீங்கள் செய்ய வேண்டாம் என நினைப்பதற்கு தயங்காமல் மறுப்பு சொல்வது
* புதியற்றை கற்று கொள்வது
* உங்களது குடும்பம், நண்பர்கள் அல்லது இதில் நிபுணத்துவம் பெற்றவர்களை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்
ஏனெனில், நீங்களும் உங்கள் மன நலனும் மிகவும் முக்கியம்’ என ஒரு நீண்ட பதிவினை மன நலன் தொடர்பான மாதம் என இந்த மாதத்தை குறிப்பிட்டு சமீரா பகிர்ந்திருக்கிறார்.