12.5 நிமிட காட்சிகள் நீக்கம்: நாளை முதல் `வலிமை' புதிய வெர்ஷன்

12.5 நிமிட காட்சிகள் நீக்கம்: நாளை முதல் `வலிமை' புதிய வெர்ஷன்

நீளம் 3 மணி நேரமாக இருந்த `வலிமை' படத்தில் பன்னிரண்டரை நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. நாளை முதல் புதிய வெர்ஷன் திரையரங்குகளில் திரையிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நடித்துள்ள வலிமை படம் நேற்று வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத் தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, படத்தின் நீளம் 3 மணி நேரமாக இருப்பதுதான் அதிக அளவில் நெகட்டிவாக பேசப்பட்டு வந்தது. படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், வலிமை படத்தில் பன்னிரண்டரை நிமிடங்கள் காட்சியை படத்தில் இருந்து நீக்கியுள்ளது படக்குழு. நீக்கப்பட்ட புதிய வெர்ஷன் நாளை முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Related Stories

No stories found.