
நடிகர் தனுஷ் நடிக்கும் 50-வது படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 100 கோடி பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் 'திருச்சிற்றம்பலம்' வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த 'வாத்தி' படம் பிப்-17-ம் தேதி வெளியாக உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தனுஷ் அறிமுகமாக உள்ளார். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிக்கும் 50-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குள் தன்னுடைய 'கேப்டன் மில்லர்' படத்தினை முடித்து விட நடிகர் தனுஷ் தீவிரமாகியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தை 'ராக்கி', 'சாணிக் காயிதம்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.
இந்த சூழ்நிலையில், நடிகர் தனுஷ் நடிக்கும் 50-வது படத்திற்கு சன் பிக்சர்ஸ் 100 கோடி பட்ஜட்டை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இவ்வளவு பிரம்மாண்ட செலவில் நடிகர் தனுஷ் நடிக்கவில்லை. எனவே, இப்படம் மாஸ் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.