அந்த கவுரவம் இனி கிடைக்காது: வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டு தடை!

அந்த கவுரவம் இனி கிடைக்காது: வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டு தடை!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது விழா, அகாடமி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 10 ஆண்டு தடை விதித்து ஆஸ்கர் கமிட்டி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில், 'கிங் ரிச்சர்ட்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருதைப் பெற, நடிகர் வில் ஸ்மித் விழாவுக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி நடிகை ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கிண்டலாகப் பேசினார்.

ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற ஒருவகை முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டதால் மொட்டை அடித்துள்ளார். கிறிஸ் ராக் பேசியதை தாங்கிக் கொள்ளாத வில் ஸ்மித், மேடைக்குச் சென்று அவர் கன்னத்தில் அறைந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் தனது செயலுக்காக வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார்.

கிறிஸ் ராக்கை அறையும் வில் ஸ்மித்
கிறிஸ் ராக்கை அறையும் வில் ஸ்மித்

இந்த சம்பவம் குறித்து கிறிஸ் ராக் போலீஸில் புகார் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால், ஆஸ்கர் கமிட்டி விசாரணை நடத்தியது. பின்னர், ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் நடந்துகொண்டதை ஏற்க முடியாது. இந்த சம்பவத்துக்காக வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி. வில் ஸ்மித்துக்கு எதிராக நாங்கள் எடுத்திருக்கிற 10 ஆண்டு தடை என்கிற முடிவு, கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அகாடமி மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

பாரம்பரியமாக, சிறந்த நடிகர் விருது பெற்ற ஒரு நடிகர், அடுத்த வருடம் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்படுபவருக்கு விருதை வழங்குவது வழக்கம். அந்த கவுரவம் வில் ஸ்மித்துக்கு கிடைக்காது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in