ஒரு மாதம், 3 கண்டங்கள், 4 நகரங்கள்: ஃபிளைட் பிடித்தார் நடிகை பூஜா ஹெக்டே

ஒரு மாதம், 3 கண்டங்கள், 4 நகரங்கள்: ஃபிளைட் பிடித்தார் நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே, ஒரு மாதம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. தமிழில் விஜய்யுடன் நடித்த ’பீஸ்ட்’ படத்துக்குப் பிறகு அவர், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியில் ரன்வீர் சிங்குடன் நடித்துள்ள 'சிர்கஸ்' முடிந்துவிட்டது.

அடுத்து சல்மான் கான் ஜோடியாக 'கபி ஈத் கபி தீவாளி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு மாதம் சுற்றுலா சென்றுள்ளார். இதுபற்றி, ' ஒரு மாத கால காவியப் பயணத்தைத் தொடங்குகிறேன்' என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 'ஒரு மாதம், 3 கண்டங்கள்,4 நகரங்கள்' என குறிப்பிட்டுள்ளார். மும்பையில் இருந்து பாங்காக் விமானத்தில் ஏறும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in