விரைவில் தயாராகும் ‘வேட்டையாடு விளையாடு 2’ - கதை என்ன தெரியுமா?

விரைவில் தயாராகும் ‘வேட்டையாடு விளையாடு 2’ - கதை என்ன தெரியுமா?

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாவது பாகம் தயாராவது உறுதியான நிலையில், இப்படத்தின் கதை குறித்தும் முக்கியத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மாணிக்கம் நாராயணனின் செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் 2006-ல் வெளியானது. போலீஸ் டெபுடி கமிஷனர் ராகவன் எனும் பாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தப் படத்தில் ஜோதிகா, பிரகாஷ் ராஜ், கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராவது உறுதியாகியிருக்கிறது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கின்றன. படத்தின் கதைக்களம் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியாக கமல் நடிக்கிறார்.

அவரிடம் புது வழக்கு ஒன்று விசாரணைக்காக வருகிறது. அது என்ன வழக்கு, கமல் விசாரணையில் கண்டுபிடித்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதையாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in