விஜய் ஆட்சியில் இயக்குநர் லோகேஷூக்கு அமைச்சர் பதவி; எந்த இலாகா தெரியுமா?

லோகேஷ் கனகராஜ், விஜய்
லோகேஷ் கனகராஜ், விஜய்

விஜய் ஒருவேளை அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் விஜய் அளித்துள்ள பதில் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.

’லியோ’ பட வெற்றி விழாவில் நடிகர் விஜயின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாகி உள்ளது. ‘ஒரே சூப்பர்ஸ்டார் தான்’ என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் அங்கங்கே தனது அரசியல் என்ட்ரியை மறைமுகமாகக் குறிப்பிடவும் தவறவில்லை. அந்த வகையில், நேற்று நடிகர் விஜய் பேசி முடித்ததும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி மற்றும் ஆர்.ஜே.விஜய் இருவரும் ரேப்பிட் ஃபயர் சுற்றில் நடிகர் விஜயிடம் சில கேள்விகள் கேட்டனர்.

அதன்படி, “இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பத்து படங்கள்தான் இயக்குவேன் என சொல்கிறார். அதை முடித்துவிட்டு ஒருவேளை அவர் வருங்காலத்தில் நீங்கள் ஆரம்பிக்கும் கட்சியில் இணைந்து நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அவருக்கு என்ன பதவி கொடுப்பீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.

'லியோ’ பட விழாவில் நடிகர் விஜய்...
'லியோ’ பட விழாவில் நடிகர் விஜய்...

அதற்கு நடிகர் விஜய், “கற்பனையாகக் கேட்கிறீர்கள். நானும் கற்பனையாகவே பதில் சொல்கிறேன். போதைப் பொருள் ஒழிப்பு இலாகா என்பதைத் துவங்கி அதில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம்” என சொல்லியதும் அரங்கத்தில் அனைவரும் கைத்தட்டி கொண்டாடினர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் தொடர்ச்சியாக போதைப் பொருள் ஒழிப்பு என்பதை முன்னிலைப்படுத்தி வருவதால் நடிகர் விஜய் அப்படி சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in