லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகும் வாய்ப்பு: கோவை காவல்துறை அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகும் வாய்ப்பு: கோவை காவல்துறை அறிவிப்பு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணி புரியும் வாய்ப்பை அறிவித்துள்ளது கோவை காவல்துறை.

‘மாநகரம்’ படம் மூலமாகத் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்கள் மூலம் தமிழில் முன்னணி இயக்குநராக தற்போது அவர் வலம் வருகிறார். தனது படங்களில் தொடர்ந்து போதைப்பொருட்களுக்கு எதிரானக் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார் லோகேஷ்.

இந்த நிலையில், கோவை காவல்துறையும் தனியார் நிறுவனமும் இணைந்து குறும்படப் போட்டி ஒன்றை கல்லூரி மாணவர்களுக்கு அறிவித்துள்ளது. போதைப் பொருள் வழக்கத்தைத் தடுக்கும் வகையில் ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் இந்தக் குறும்படம் அமைந்திருக்க வேண்டும்.

இதில் முதல் ஐந்து இடங்களுக்குள் வருபவர்களுக்கு இயக்குநர் லோகேஷூடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். அதில் இருந்து ஒருவர் இயக்குநர் லோகேஷூடன் அடுத்தப் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய்யின் 67-வது படத்தை இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in