ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திடீர் திருமணம்?: வைரலாகும் புகைப்படம்

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா  திடீர் திருமணம்?: வைரலாகும் புகைப்படம்

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் திடீர் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளிவந்த 'பெல்லி சூப்புலு'. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தது.

இதன் காரணமாக இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வெளியான 'கீத கோவிந்தம்' மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதற்குக் காரணம் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு இருந்த கெமிஸ்ட்ரிக் தான். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவானது.

இதன் காரணமாக இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும், இணைந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகிறார்கள் என்றும், இவர்களுக்குத் திருமணம் நடந்து விட்டது என்றும் செய்திகள் பரவின. இதற்குக் காரணம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூர் சொன்ன பதில் தான். 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்வி கபூரிடம்," யாரை திருமணம் செய்வீர்கள்?" எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதிலில். விஜய் தேவரகொண்டா பெயரும் இருந்தது. அதற்கு ஜான்வி, " அவர் ஏற்கெனவே திருமணமானவர்" என அதிர்ச்சியைக் கொடுத்தார்.

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் மாலையும், கழுத்துமாக இருக்கும் திருமணப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், இது உண்மையான புகைப்படம் இல்லை என்றும், ஃபேன் எடிட் புகைப்படம் என்றும் கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா தற்போது 'வாரிசு', 'புஷ்பா 2' படங்களில் தற்போது பிஸியாக உள்ளார். மிகவும் எதிர்பார்த்த 'லைகர்' தோல்வியால் துவண்டுள்ள விஜய் தேவரகொண்டா , அடுத்த படத்திற்காக சிறிது இடைவேளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் இவர்கள் திருமணம் செய்தது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in