புதிதாக ரெஸ்டாரன்ட் திறந்த பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை பிரியங்கா நல்காரி
நடிகை பிரியங்கா நல்காரி

’ரோஜா’ சீரியல் மூலம் நடித்து புகழ் பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி புதிதாக ரெஸ்டாரன்ட் தொடங்கியுள்ளதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை பிரியங்கா நல்காரி
நடிகை பிரியங்கா நல்காரி

சன் டிவியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இதன் பிறகு இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சீதா ராமன்’ சீரியலில் நடித்தார். இதற்கிடையில், இவர் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ராகுலைத் திருமணம் செய்து கொண்டார். இதனால், ‘சீதா ராமன்’ சீரியலில் இருந்து விலகினார் பிரியங்கா.

அதன் பிறகு, மீண்டும் ‘நளதமயந்தி’ சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதுதவிர தெலுங்கிலும் சீரியல் நடித்து வருகிறார். கணவர் மலேசியாவில் இருக்க சென்னை, ஹைதராபாத், மலேசியா என மாறி மாறி பறந்து வரும் பிரியங்கா தற்போது கணவருடன் இணைந்து புதிய ரெஸ்டாரன்ட் பிசினஸைத் தொடங்கியுள்ளார். ரெஸ்டாரன்டிற்கு பூஜை நடத்தியுள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து இந்தத் தகவலை பகிர்ந்துள்ள பிரியங்காவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in