`புகழ் உடனிருக்கும்போது சோர்வே இருக்காது'

சந்திப்பு குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி
`புகழ் உடனிருக்கும்போது சோர்வே இருக்காது'

‘குக் வித் கோமாளி’ புகழை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். ‘புகழ் அண்ணன் உடன் இருக்கு போது நீங்கள் நிச்சயம் சோர்வாகவே உணர முடியாது" என்று நடராஜன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ். ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போனார் புகழ். இவரது நடிப்பில் ‘வலிமை’, ‘என்ன சொல்ல போகிறாய்’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இவரது சினிமா பயணத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

அடுத்து இவரது நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’, ‘யானை’, ‘காசேதான் கடவுளடா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கின்றன. அடுத்தடுத்து படங்கள் கைவசம் இருப்பதால் புகழ் தற்போது ஆரம்பித்துள்ள ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. ஆனால், என்னதான் படங்களில் பிஸியாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை விட்டு தர மாட்டேன் என முந்தைய சீசன்களில் புகழ் கூறியிருந்ததார்.

சொல்லியபடியே, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ஆரம்பித்த சில எபிசோட்டுகளிலேயே புகழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் நடராஜனை புகழ் சமீபத்தில் அவருக்கு வீட்டுக்கு சென்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படங்களை நடராஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடராஜன், ‘புகழ் அண்ணன் உடன் இருக்கு போது நீங்கள் நிச்சயம் சோர்வாகவே உணர முடியாது. எனது அழைப்பை ஏற்று என்னுடைய வீட்டிற்கு வந்ததற்கு நன்றி! உங்களுடன் செலவழித்த நேரம் மறக்க முடியாதது’ என கூறி புகழ் மற்றும் புகழுடன் தன் நண்பர்கள் இருக்கும்படியான புகைப்படங்களை நடராஜன் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் யோகி பாபுவை சந்தித்த கிரிக்கெட் வீரர் நடராஜன் அவருக்கு முருகர் சிலை பரிசளித்தார். அதேபோல, நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோருடனும் நடராஜன் நல்ல நட்பில் உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, இவர்கள் வீடியோ காலில் பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in