ஜான்வி கபூரின் ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் முதலிடம்!

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான ‘மிலி’ ஓடிடியில் முதலிடத்தில் இருப்பதை படக்குழு தெரிவித்துள்ளது.

சவாலான கதைக்களத்தையும் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடு ‘மிலி’. சர்வைவல் டிராமாவாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘மிலி’ கதை பார்வையாளர்களையும் சினிமா ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ஜான்வி கபூரின் திறமையான நடிப்புக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து ‘மிலி’ திரைப்படம் இந்தியன் ஓடிடி டொமைனில் முதல் இடத்தையும், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ட்ரெண்டிங் டாப்பிக்காகவும் உள்ளது.

‘குட் லக் ஜெர்ரி’- ஒரு டார்க் காமெடி, ‘ரூஹி’- ஹாரர் காமெடி, ‘குன்ஜன் சக்சேனா’- பயோகிராஃபிகல் டிராமா மற்றும் ‘மிலி’- சர்வவைல் டிராமா என தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக தனது நடிப்புத் திறமைக்கு சவால் விடுக்கும் கதாபாத்திரங்களையே ஜான்வி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தங்களின் கடின உழைப்பானது படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருப்பதாக படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in