உடற்கூராய்வை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நட்டி!

உடற்கூராய்வை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நட்டி!

உடற்கூராய்வை மையமாக வைத்து உருவாகும் கிரைம் திரில்லர் படத்தில் நட்டி நடிக்கிறார்.

ரெட் கிரீன் புரொக்‌ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில், ஆண்டனி சாமி இயக்கும் படம் ’கூராய்வு’. கிரைம் திரில்லர் படமான இதில் நட்டி நாயகனாக நடிக்கிறார். இதை ஆண்டனி சாமி இயக்குகிறார். 'முந்திரிக்காடு' படத்தில் நடித்த சுபபிரியா மலர், நாயகியாக நடிக்கிறார். மனோபாலா, இளவரசு, போஸ் வெங்கட், ரவிமரியா உள்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக நாக உதயன் பணியாற்றுகின்றனர்.

கூராய்வு படத் தொடக்க விழாவில்..
கூராய்வு படத் தொடக்க விழாவில்..

ஜூலை 13-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கி ஒரே ஷெட்யூலில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது.

இதில், இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, எழில், மனோபாலா, மனோஜ் குமார், சரவண சுப்பையா, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படம் பற்றி பேசிய இயக்குநர் ஆண்டனி சாமி," 2018-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. போஸ்ட்மார்ட்டம் எனப்படும் உடல் கூராய்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை இது. இந்த திரைப்படம் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். படத்தின் கதை சுவாரஸ்யமாக இருக்கும். படத்தில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. இது நிச்சயமாக ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in