என் பார்வையில் சுதந்திரம்

செவியரின் வலைப்பதிவு
என் பார்வையில் சுதந்திரம்

உங்கள் பார்வையில் எது சுதந்திரம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு செவிலியர் ர.பாக்கிய லட்சுமி சுந்தரம் என்பவர் தமிழினி புலனத்தில் பகிர்ந்துள்ள பதிவு இது. எது சுதந்திரம் என்பதற்கு இவர் தரும் விளக்கங்கள் நாம் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று.

இதோ அவரது பதிவு


சுதந்திரம் என்பது தனி ஒருவர் தன் மனம்போன போக்கில் வாழ்வதில் இல்லை. அரசாளும் மன்னவன் முதல் நாளும் அரைவயிறுக்காக கையேந்தும் கடைநபர் வரை சமூகநலம் சார்ந்தது அதிகமாக இருக்கிறது .

எனது பணியை எனது வாரிசு நீயும் தொடரவேண்டும் என வற்புறுத்தி தனது பணியையேத் தொடரச்செய்தல் அல்ல கல்விசுதந்திரம்.

வாரிசுகளின் ஈடுபாட்டினை அறிந்து

அத்துறையில் அவர்களை வழிமுறைப்படுத்துதலில்தான் உள்ளது கல்விக்கான சுதந்திரம்.

எனது கடவுள் பெரியவர் எனது மதம் பெரியது என இறைபெயரில் பொதுமக்களை திசைதிருப்புதல் அல்ல சமயசுதந்திரம்.

ஆத்திகமோ நாத்திகமோ அவரவர் நம்பிக்கையை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இறைபெயர்நினைந்து பொதுப்பணி ஆற்றுதலே சமயசார்பற்ற சுதந்திரம்.

எழுதுகோல் இருக்கிறது என்பதற்காக அத்துணையும் எழுதுவதல்ல சுதந்திரம்.

தனது எழுத்தினால் ஏற்படப்போகும் மாற்றங்கள் சிறுதுளி எனினும் அதனை அஞ்சாது எழுதுதலே எழுத்துரிமைக்கான சுதந்திரம்.

மேடைகள் வரவேற்கும் தருணங்களில் கரம்வொலி வானை அதிரவைக்குமளவிற்கு பேசுவதல்ல சுதந்திரம். தனது கருத்துகளின் வலிமை காலங்கடத்தும் உறுதியாய் தொடர்ந்திடுமாறு மொழிதலே பேச்சுரிமைக்கான சுதந்திரம்.

ஆணும் பெண்ணும் சமம் எனும் பதாகை சுமந்து போராடிப் பெறுதல் அல்ல சுதந்திரம். அவரவர் வீட்டினில் இயல்பாக அவள் உள்ளம் விரும்புதலை உணரவைத்து அவர்கள் எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் தடையிடாதிருத்தலே பெண் சுதந்திரம்.

சுதந்திரம் என்பது ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதாக இருப்பதை விட ஒருவருக்கு உரிமையானதில் பிறர் தலையிடாது இருத்தலே உண்மையான சுதந்திரம் ஆகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in