வாட்ஸ் அப்பில் புதிய வசதி... இனி 3 முக்கிய விஷயங்களை பின் செய்யலாம்; சூப்பர் அப்டேட்!

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

இனி வாட்ஸ்அப் செயலியில் ஒரே சமயம் மூன்று குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மார்க் ஸுகர்பெர்க்
மார்க் ஸுகர்பெர்க்

இதுகுறித்து மார்க் ஜூக்கர்பர்க் தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலில் இன்று வெளியிட்டுள்ள தகவலின் படி, ”பயனர்கள் சாட் ஒன்றில் அதிக குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் எளிதில் மிகமுக்கிய தகவல்களை இயக்கிட முடியும். பயனர்கள் டெக்ஸ்ட் , புகைப்படம் அல்லது கருத்து கணிப்பு உள்ளிட்டவைகளை பின் செய்ய முடியும். இப்படி பின் செய்யப்படும் மெசேஜ்கள் 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரை சாட்களின் மேல் பேனர் போன்று காட்சியளிக்கும்.

அதிக குறுந்தகவல்களை பின் செய்யும் போது, சமீபத்தில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும். குறுந்தகவல்களை பின் செய்ய, குறிப்பிட்ட மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து "பின்" ஆப்ஷனை க்ளிக் செய்து எவ்வளவு நேரம் பின் செய்யப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ் - பின் எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பின் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் சாட்ஸ்
பின் சாட்ஸ்

இதேபோல்.” ஐபோனில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ், பின் எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். வெப் மற்றும் டெஸ்க்டாப்-இல் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ க்ளிக் செய்து மெனு ஆப்ஷனில் பின் மெசேஜ் எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பிறகு, பின் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். க்ரூப் சாட்களில் மெசேஜ்களை பின் செய்ய க்ரூப் அட்மின்கள் அனுமதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...
#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in