‘பழைய ட்விட்டர் ஹேண்டில்கள் விற்பனைக்கு...’ கல்லா கட்ட எல்லா வகையில் இறங்கும் எலான் மஸ்க்!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

நீண்டகாலமாக பயன்படுத்தப்படாத மற்றும் செயலற்ற ட்விட்டர் ஹேண்டில்கள் விற்பனைக்கு என அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதற்கு எக்ஸ் தளம் என நாமகரணமிட்டிருக்கும் எலான் மஸ்க், நட்டத்திலிருந்து நிறுவனத்தை காப்பாற்ற நானாவித உபாயங்களையும் பரிசீலித்து வருகிறார். அவற்றில் லேட்டஸ்டாக பழைய ஹேண்டில்கள் விற்பனைக்கு என அறிவித்துள்ளார்.

ட்விட்டர் ஹேண்டில்
ட்விட்டர் ஹேண்டில்

இதன்படி நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத நற்றும் செயலற்றதாக உள்ள ட்விட்டர் ஹேண்டில்கள் விற்பனைக்கு வர உள்ளன. குறைந்தபட்ச விலை, அமெரிக்க டாலர் மதிப்பில் 50 ஆயிரத்தில் தொடங்குகின்றன. விரும்புவோர் கவர்ச்சிகரமான, தங்களுக்குப் பிடித்த ஹேண்டில்களை வாங்கி, உரியதாக்கிக் கொள்ளலாம்.

ட்விட்டரில் சுமார் 150 கோடி ஹேண்டில் செயலற்றதாக உள்ளதாக கணித்திருக்கிறார்கள். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே இவற்றை ஒழிப்பது குறித்து தீர ஆலோசித்து வருகிறார் எலான் மஸ்க். உலகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவரான எலான், தொட்டதற்கெல்லாம் கட்டண விதிப்பை ட்விட்டரில் அறிமுகம் செய்து வருகிறார்.

எக்ஸ் - எலான்
எக்ஸ் - எலான்

பயனர்கள் தங்கள் தேவைக்காக வெவ்வேறு செயலிகளுக்கு செல்ல வேண்டாம் என்று, ட்விட்டரை எல்லாவித வசதிகளும் உள்ளடக்கிய சகலகலா செயலியாக மாற்றி வருகிறார். ஆனால் ஒவ்வொன்றுக்கும் கட்டண விதிப்பை அமல்படுத்த தவறவில்லை. இந்த வரிசையில் எலானின் லேட்டஸ்ட் முயற்சியாக பழைய ஹேண்டில்களை விற்கும் திட்டம் அமலாகிறது. இதன் மூலம் செயலற்ற ஹேண்டில்களுக்கு உயிர் கொடுப்பதோடு, வெகுவாய் கல்லாவை நிரப்பவும் எலான் திட்டமிட்டிருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளி போனஸ்... ஊழியர்களுக்கு கார்களை பரிசாக தந்த நிறுவன உரிமையாளர்!

நாளை கடைசி தேதி : ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

சென்னையில் பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்!

9வகுப்பறையில் சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி... மாரடைப்பால் பலியான சோகம்!

என்னை பலமுறை சாகடிச்சுட்டாங்க... நடிகர் விக்ரம் பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in