முடங்கியது வாட்ஸ் அப் சேவை: இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயனர்கள் அவதி!

முடங்கியது வாட்ஸ் அப் சேவை: இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயனர்கள் அவதி!

வாட்ஸ்அப் செயலி சேவை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முடங்கியுள்ளது.

பிரபல ஆன்லைன் மெசேஜ் செயலியான வாட்ஸ் அப், இன்று மதியம் 12.07 மணியளவில் செய்திகளை அனுப்பாமல் முடங்கியது. இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணியளவில் இந்த சேவையானது முழுமையாக செயலிழந்துவிட்டதாக அதன் பயனர்கள் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தாலி மற்றும் துருக்கியைச் சேர்ந்த வாட்ஸ் அப் பயனர்களும் தங்களால் செய்திகளை அனுப்ப முடியவில்லை என்று பதிவிட்டுள்ளனர்.

இந்த சூழலில் வாட்ஸ் அப் செயலியை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. "சிலருக்கு தற்போது செய்திகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம், விரைவில் அனைவருக்கும் வாட்ஸ் அப்பை மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று வாட்ஸ்அப் தவிர பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களை வைத்திருக்கும் மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமானது. 50 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இந்தியாவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in