
இன்ஸ்டா சென்சேஷன்
பாலிவுட் காதல் ஜோடி கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் இடையிலான திருமண புகைப்படமே, இந்த வாரத்தின் இன்ஸ்டாகிராம் சென்சேஷன்.
கத்ரீனா - விக்கி இடையிலான கல்யாணம் மட்டுமல்ல, காதலும்கூட பலரும் எதிர்பாராதது. கத்ரீனா நடிப்பு அனுபவத்திலும், வயதிலும் விக்கியை விட மூத்தவர். சல்மான்கான், ரன்பீர் கபூர் என கத்ரீனாவின் முந்தைய காதல்களை எல்லாம் ‘கண்டுபிடித்த’ பரபரப்பு பாலிவுட் ஊடகங்கள், விக்கி உடனான கத்ரீனா காதலை மோப்பமிடத் தவறின. அதுபோலவே, விக்கியுடனான தனது திருமண ஏற்பாட்டையும் ரகசியமாய் வைத்திருந்து, கடைசி நேரத்தில் அறிவித்திருக்கிறார் கத்ரீனா.
ஜெய்ப்பூரின் புராதன சிறப்புமிக்க அரண்மனையில் 3 நாட்கள் விமரிசையாக நடந்த திருமண விழா, டிச.9 அன்று நிறைவடைந்தது.120 பேர் மட்டுமே அழைக்கப்பட்ட இந்த விழாவில், கேமரா மற்றும் செல்போன்கள் தவிர்க்கப்பட்டன. இதன் காரணமாக, புதுமணத் தம்பதி வெளியிட்ட புகைப்படங்கள் தவிர்த்து விருந்தினர்கள் யாருக்கும் புகைப்படம் தகையவிலை.
மேலும், பிரியங்கா சோப்ரா பாணியில் தனது திருமண விழாவை ஓடிடி தளம் ஒன்றுக்கு ரூ.80 கோடிக்கு கத்ரீனா விற்றுவிட்டார் என்ற தகவல் வெளியானதாலும், திருமண புகைப்படத்தைக் காணும் ரசிக எதிர்பார்ப்புகள் எகிறின. கத்ரீனா கைஃப் இதுவரை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் பெரும்பாலும் ஓரிரு மில்லியன் லைக்ஸ் மட்டுமே கண்டுள்ளன. ஆனால், கத்ரீனா-விக்கி திருமண புகைப்படத்துக்கு, ஒரே நாளில் 10 மில்லியனுக்கும் (ஒரு கோடி) மேலானோர் இதயங்களைப் பறக்க விட்டிருந்தனர்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.