கம்பீரமாக நடக்கும் மிக அரிதான கரும்புலி: ஐஎஃப்எஸ் அதிகாரியின் வைரல் வீடியோ!

கம்பீரமாக நடக்கும் மிக அரிதான கரும்புலி: ஐஎஃப்எஸ் அதிகாரியின் வைரல் வீடியோ!

ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா, ஒடிசா புலிகள் காப்பகத்தில் நடமாடிய 'மிக அரிதான' கரும்புலியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி ட்விட்டரில் பதிவிடப்பட்ட இந்த 15 வினாடி வீடியோ கிளிப்பில், ஒடிசாவின் சிமிலிபால் தேசிய பூங்காவில் வசிக்கும் ஒரு கரும்புலி மரத்தில் ஏற முயற்சித்து பின்னர் கீழே இறங்கி கம்பீரமாக நடந்து செல்கிறது, இந்த மரத்தில் புலியின் கீறல்களும் பதிவாகியுள்ளது.

"சர்வதேச புலிகள் தினத்தில் ஒரு அரிய மெலனிஸ்டிக் புலியின் சுவாரசியமான கிளிப்பைப் பகிர்கிறேன்" என்று தெரிவித்து இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வகை கரும்புலிகளுக்கு தனித்துவமான மரபணு குணம் இருப்பதாகவும், புலிகள் காப்பகம் அவற்றின் எண்ணிக்கை மீட்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கருப்பு வண்ணத்தில் உள்ள மெலனிஸ்டிக் புலிகளின் கம்பீரமான கருப்பு கோடுகளுக்குப் காரணம் மரபணு பிறழ்வு ஆகும். இதனால் இந்த வகை புலிகளின் தனித்துவமான கருப்பு கோடுகள் பெரிதாகி ஆரஞ்சு வண்ணத்தில் படர்கிறது.

இந்த வீடியோவை பகிர்ந்த மற்றொரு ஐஎஃப்எஸ் அதிகாரியான பர்வீன் கஸ்வீன், " இந்த வகை அரிய புலிகள் முதன்முதலில் 2007-ல் சிமிலிபால் வனப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in