‘பொய்ச் செய்தி, மலிந்த மொழி, இழிந்த ரசனை’ - ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு வைரமுத்து கோரிக்கை!

வைரமுத்து
வைரமுத்துhindu கோப்பு படம்

பொய்ச் செய்திக்கும், மலிந்த மொழிக்கும், இழிந்த ரசனைக்கும் இடம்தர வேண்டாம் என ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க்-க்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.

பிரபல சமூக வலைத்தள ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நேற்று வாங்கினார். இந்த சூழலில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ட்விட்டர் நிறுவனத்தின்

புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே!. இந்தியாவின்

தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன்.

வலதுசாரி இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும்.

ஆனால், பொய்ச் செய்திக்கும், மலிந்த மொழிக்கும், இழிந்த ரசனைக்கும் இடம்தர வேண்டாம். உலக நாகரிகத்தை

ஒழுங்கு படுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in