யார் ஈழத் துரோகி?

ட்விட்டரில் ட்ரெண்டாகும் பிரபாகரன் பிறந்தநாள்
யார் ஈழத் துரோகி?

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளான இன்று (நவ.26), ட்விட்டரில் அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் ‘துரோகி’ எனும் ஹேஷ்டேகுடன் ட்ரெண்ட் செய்துவருகிறார்கள்.

#HBDதேசியத்தலைவர்67 எனும் ஹேஷ்டேகுடன் பிரபாகரன் ஆதரவாளர்களுடன், நாம் தமிழர் கட்சியினர், சீமான் ஆதரவாளர்கள் எனப் பலரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடைய பிறந்தநாளை உணர்வுபூர்வமாகக் கொண்டாடிவருகிறார்கள்.

மறுபுறம், #HBDஈழத்துரோகி67 எனும் ஹேஷ்டேகுடன், ராஜீவ் காந்தி படுகொலை, விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறார்கள் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டது தொடர்பான புகார்கள் ஆகியவை குறித்த மீம்ஸுடன், சீமான் குறித்த மீம்ஸும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இன்றைக்குப் பரிதாபமான நிலையில் இருக்க, சீமான் போன்றோர் செல்வச் செழிப்புடன் இருப்பதாகக் காட்டும் மீம்ஸ் அதிகம் பகிரப்படுகின்றன.

#HBDஈழத்துரோகி67 எனும் ஹேஷ்டேகில், 2009 இலங்கை இறுதிப்போர் தருணத்தில், போரை நிறுத்தக்கோரி உண்ணாவிரதம் இருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதியை விமர்சிக்கும் ட்வீட்டுகளும் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in