ட்விட்டரில் ஆடியோ - வீடியோ அழைப்புகள் அறிமுகம்... எலான் மஸ்க் அடுத்த அதிரடி!

எக்ஸ் வீடியோ அழைப்பு
எக்ஸ் வீடியோ அழைப்பு

எக்ஸ் தளத்தில்(ட்விட்டர்) ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் தங்கள் மத்தியிலான போட்டி காரணமாகவும், பயனாளரை ஈர்க்கும் முகமாகவும், புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பிட்ட சமூக ஊடகத்தின் எல்லைகளை விரிவு செய்யும் இந்த போக்கு, பயனருக்கும் ஆதாயம் தந்து வருகிறது. இந்த வரிசையில் ட்விட்டர் தளத்தில் இனி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் என அதன் அதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டரில் அழைப்புகள்
ட்விட்டரில் அழைப்புகள்

வாட்ஸ் ஆப், டெலகிராம், மெஸெஞ்சர், சிக்னல் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக செயலிகளிலும் ஆடியோ/வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி உள்ளது. இவற்றில் வாட்ஸ் ஆப் அழைப்புகள் வெகு பிரபலமானவை என்றபோதும், அவை பயனரின் தொடர்பு எண்ணை வெளிப்படையாக அறிவிக்கச் செய்கின்றன.

ட்விட்டர் அறிமுகப்படுத்தும் ஆடியோ/வீடியோ சேவையில் தொடர்பு எண்ணை வெளிப்படுத்தாது அழைப்புகளை மேற்கொள்ளலாம். ட்விட்டர் தளத்தில் இணைப்பில் உள்ளவர்கள் இதன் மூலம் தங்களது தொடர்பு எண்ணை பரிமாறாது ஆடியோ-வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் முடியும்.

எக்ஸ் - ட்விட்டர்
எக்ஸ் - ட்விட்டர்

தற்போதைக்கு இந்த புதிய சேவை ஐபோன்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. விரைவில் ஆன்டிராய்டு உள்ளிட்ட இதர இயங்குதள போன்களுக்கும் அறிமுகமாக உள்ளன. இந்த வசதியை பெறும் நடைமுறை மற்றும் செட்டிங்ஸ் மாற்றம் குறித்து எலான் மஸ்க் இன்று தகவல் வெளியிட்டுள்ளார். எனினும், இந்த வசதி ப்ளூ டிக் உள்ளிட்ட கட்டண பயனர்களுக்கு மட்டுமானதா அல்லது அனைவருக்குமானதா என்பது குறித்து இன்னமும் ட்விட்டர் தெளிவுபடுத்தவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு; கேரளத்தில் மீண்டும் பரபரப்பு!

அதிர்ச்சி... தூக்கில் தொங்கிய 10 ம் வகுப்பு மாணவி! மர்ம மரணமாக போலீஸார் விசாரணை!

பெரும் சோகம்... டேங்கர் லாரியை மறைத்த பனிமூட்டம்... விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!

தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலியான பரிதாபம், 50 பேர் காயம்

இளம்பெண் தீப்பற்றி எரிந்து பலி... போலீஸார் விசாரணை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in