
யூடியூபில் சொல்லியடித்த ’ஓ.. சொல்றியா’
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கு, தமிழ் உட்பட 5 மொழிகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் புஷ்பா. தமிழ் பதிப்பில் விவேகா எழுதி ஆன்ட்ரியா பாடிய ’ஓ சொல்றியா...’ பாடல், படம் வெளியாகும் முன்னரே புஷ்பாவுக்கு பெரும் சர்ச்சைகளையும், விளம்பரத்தையும் சேர்த்துவிட்டது.
வழக்கமாய் திரைப்பாடல்களில் பெண்களை இழிவுபடுத்துவதாய் எழும் புகார்களுக்கு மத்தியில், ஆண்களை இழிவு படுத்துவாக ’ஓ சொல்றியா...’ பாடலுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. ஆண்கள் பாதுகாப்புக்கு என சங்கங்கள் இருப்பதெல்லாம் இந்த எதிர்ப்பில்தான் வெளியுலகுக்கு தெரியவந்தன. காயம்பட்ட ஆண்கள் சார்பாக தீனமாக ஒலித்தபோதும் அவை சுவாரசியமாக வெளிப்பட்டன.
‘ஓ சொல்றியா...’ பாடலை, இளசுகளின் தேசிய கீதம் என்று கலைப்புலி தாணு சொல்லப்போக, அவருக்கு எதிராகவும் ஆண்கள் சங்கங்கள் வரிந்துகட்டின. இதில் சிலர் பதிலடி என்ற பெயரில், அதே மெட்டில் குப்பையாய் ஒரு பாடலை இணையத்தில் பரப்பி வெறுப்பேற்றினார்கள்.
புஷ்பா திரைப்படத்தில் இந்தப் பாடலுக்கு இடுப்பை அசைத்திருப்பவர் சமந்தா. இந்த வகையில் படத்தின் நாயகியான ராஷ்மிகாவை, சமந்தா ஓவர்டேக் செய்திருந்தார். பதறிப்போன ராஷ்மிகா தனது ’சாமி’ பாடலுக்கு நடன வீடியோவை வெளியிட்டு ஜோதியில் ஐக்கியமாக முயன்றார்.
வெளியான ஒரே வாரத்தில் ஒரு கோடி பார்வைகளைப் பெற்று, எதிர்ப்பு, ஆதரவு என சர்ச்சைகளைக் கூட்டிய வகையில், ’ஓ சொல்றியா...’ பாடல் இந்த வாரத்தில் யூடியூபில் ஹிட்டடித்தது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.