இணைய உலகம்

மணப்பெண்ணாக ஷ்ரேயாவின் தாய்
மணப்பெண்ணாக ஷ்ரேயாவின் தாய்

தாய்க்கு மணமுடித்த மகள்!

சாதி, மதம், அரசியல், சினிமா என சகலத்திலும் மோதல் போக்குள்ளவர்களால் சதா களேபரமாய் காட்சியளிக்கும் சமூக ஊடகங்கள், அவ்வப்போது இதமான ட்ரெண்டிங்கிலும் ஈடுபடும். அப்படியொரு அதிசயம் அண்மையில் அரங்கேறியது. இளம்பெண் ஒருவர் தனது தாயின் 2-வது மணவாழ்வின் தொடக்கத்தை, இணையத்தில் விழா போல கொண்டாடி இருக்கிறார்.

திருமண வாழ்க்கை கசந்து போனால் ஆண் போல பெண்ணால், அத்தனை எளிதில் அதிலிருந்து வெளியேறிவிட முடிவதிலை. அப்படி வெளியேறியவர்களும் தங்களுக்குப் பிடித்த அல்லது தங்களைப் பிடித்த இணையுடன் புதிய வாழ்க்கையை தொடங்கிவிடுவதும் சாத்தியமாவதில்லை.

ஷ்ரேயா
ஷ்ரேயா

ஷ்ரேயா என்ற பெயரில் இன்ஸ்டாவை கலக்கும் இளம்பெண் ஒருவர், தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், குடும்ப விழா குறித்த பதிவுகளை தொடர்ந்து பகிர ஆரம்பித்தார். கணவரைப் பிரிந்து 15 ஆண்டுகளாக தனியாக இருந்த தாயின் மறுமணத்துக்கான ஒவ்வொரு ஏற்பாட்டையும் புகைப்படங்கள், வீடியோக்களாக ரசித்து பதிவேற்ற ஆரம்பித்தார் ஷ்ரேயா. சமூக ஊடகங்களுக்கே உரிய கிண்டல் கேலிகள் முளைத்தபோதும், நாளடைவில் இணைய உலகம் ஷ்ரேயாவின் பதிவுகளை கொண்டாட ஆரம்பித்தது.

அவரது பதிவுகளால் தாக்குண்ட பலரும் தங்கள் குடும்பத்தில், நட்பில் தனி மரமாய் வாழ்வோரின் மறுமண வாழ்க்கைக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக அறிவித்தனர். ஷ்ரேயாவும் அவரது தாயும் சேர்ந்து நடனமாடும் வீடியோக்கள், மணமகளாய் தாய் தயாரான புகைப்படங்கள் ஆகியவை திருமண வைபவம் முடிந்தபிறகும் இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in