சாதிப் பாசம் யாருக்கு அதிகம்? - சுப.உதயகுமாரை சாடிய இயக்குநர் கெளதமன்

சாதிப் பாசம் யாருக்கு அதிகம்? - சுப.உதயகுமாரை சாடிய இயக்குநர் கெளதமன்
சுப.உதயகுமார்

இயக்குநர் கெளதமன் தன் முகநூல் பக்கத்தில் வன்னியர்கள் ஒரு அற்புதமான யுத்தத்திற்கு தயாராக வேண்டும் என்னும் தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதற்கு சுப.உதயகுமார் தன் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு இப்போது இயக்குநரும், தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கெளதமன் மிகக் காட்டமாக பதில் விமர்சனம் செய்துள்ளார்.

வன்னியர்கள் யுத்தத்திற்கு தயாராக வேண்டும் என்னும் கெளதனின் அறிக்கையை முன்வைத்து சுப உதயகுமார் தன் முகநூல் பக்கத்தில், ‘வலி, பெருவலி, வேதனை, யுத்தம் என்னும் வார்த்தைகள் இல்லாமல் தோழரால் எதுவும் பேசமுடியாது. ஆதார் அட்டையில், ரேசன் அட்டையில் சாதியை சேர்க்க வேண்டுமாம். பேசாமல் நெற்றியில் பச்சைக்குத்தி விடலாமே?’ என காட்டம் காட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து தன் முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் கெளதமன், ``கனிமொழி தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது அவர் வெற்றிபெற வேண்டுமென முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சாதி பாசமற்ற தோழர் உதயகுமாருக்கும் எனது வாழ்த்துகள். ஒரே ஒரு போராட்டம் நடத்திவிட்டு ஊர் ஊராக ஓடிக் கொண்டிருப்பவர் யார்? ஊர் ஊராக ஓடி தமிழர் குடிகளின் உரிமைக்காக போராடிக் கொண்டிருபவன் யார் என காலம் அடையாளப்படுத்தும்.

வெடிச்சிரிப்பு மற்றும் வேடிக்கையாக பின்னூட்டம் இடுபவர்களிடம் ஒன்று கேட்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் நீங்களெல்லாம் உங்கள் சாதிகளை பதிவிடுவீர்களா இல்லையா? உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் கல்வி சான்றிதழ்களில் உங்கள் சாதியின் பெயரை குறிப்பிட்டிருக்கிறீர்களா இல்லையா? உள்ளுக்குள் அழுக்கை வைத்துக்கொண்டு உலகத்தின் முன் நாயகன் வேடம் போடுபவர்கள் தங்களின் சுயத்தோடு ஒருமுறை உங்கள் வீட்டு கண்ணாடி முன்நின்று புன்னகைத்து பாருங்கள்’’ என விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.