
இன்ஸ்டாவில் ரன்பீர் மூட்டிய தீ
பாலிவுட் நாயகி தீபிகா படுகோனின் முதலும் தீவிரமுமான ரசிகராக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில், கணவர் ரன்வீர் சிங் அலாதியான ஆர்வம் கொண்டவர். பேட்டிகளின்போதும், மேடைகளிலும் தீபிகாவின் திரைப்படங்கள், நடிப்பு, குணாதிசயம் என்று மனிதர் உருகிப்போவார். அப்படித்தான் தீபிகாவின் முதல் ஓடிடி பிரவேசமான ’கெஹ்ரயான்’ திரைப்படம் குறித்தே, கடந்த சில மாதங்களாக புகழ்ந்து கொண்டிருந்தார் ரன்வீர் சிங்.
ஆனால், படம் வெளியான நாளில் ரன்வீர் அமைதியோ அமைதியானார். காரணம், தீபிகா படுகோனின் நடிப்பைவிட அவரது துணிச்சலான முத்தக் காட்சிகளையே ரசிகர்கள் அதிகம் விதந்தோதி வந்தார்கள். அதிலும் ரன்வீரை வழக்கமாய் வம்பிழுக்கும் வெறுப்பாளர்கள் குழு, தங்கள் பதிவுகள் அனைத்திலும் ரன்வீரை கோர்த்து வந்தது.
பொறுத்துப்பார்த்த ரன்வீர் சிங், படம் வெளியான நாளின் இரவில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துவிட்டு மீண்டும் அமைதியில் ஆழ்ந்துவிட்டார். கறுப்புவெள்ளையில் கடற்கரை பின்னணியில், ரன்வீர் - தீபிகா இடையிலான நெருக்கமான அந்த இச் புகைப்படம் இன்ஸ்டாவில் பற்றிக்கொண்டது.
காட்டுத்தீ கட்டுக்குள் அடங்காதபோது, எதிர்திசையில் தீ மூட்டுவதையும் ஒரு உபாயமாக பாவிப்பார்கள். அதே நேர்த்தியில் ரன்வீர் பகிர்ந்த புகைப்படம், கெஹ்ரயான் முத்த சர்ச்சைகளை அப்பால் தள்ளியிருக்கிறது. ஆனால், மனைவியின் திரைப்படங்களை புரமோட் செய்வதை கடமையாக பின்பற்றும் ரன்வீர் சிங் இம்முறை கடமை தவறிவிட்டதாக, அவரை வழக்கம்போல வம்பிழுத்து வருகிறார்கள். ஆனபோதும் அந்த நச் இச் புகைப்படத்துக்கு ரசிகர்களின் ஃபயர் எமோஜிக்களுக்குப் பஞ்சமில்லை.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.