இணைய உலகம்

சிவன் நயன் உடன் அமீன்
சிவன் நயன் உடன் அமீன்

இன்ஸ்டாவில் வைரலான ஏ.ஆர்.ஆர்.அமீன்

ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜன.6 அன்று அவருக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன. விவரமறிந்த சிலர் மட்டுமே, ரஹ்மான் வீட்டு இன்னொரு விஐபிக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னார்கள்.

அவர் ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன். தந்தையின் பிறந்தநாளில் பிறந்த தனயனுக்கு, இந்த வருடம் 19 வயது. அமீனுக்கு அந்நியோன்யமாய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும் அடக்கம். அமீனுடன் இந்த ஜோடி எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, அமீனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தந்தையின் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பின்னணி பாடல் பாடுவது என ரஹ்மான் வழியிலேயே அமீனும் பயணித்து வருகிறார். ஆனால், விக்னேஷ் சிவன் பகிர்ந்த படத்தைப் பார்த்த பலரும், விக்னேஷ் இயக்கத்தில் அமீன் எப்போது ஹீரோவாகப் போகிறார் என்று கேட்டிருந்தனர். அந்த அளவுக்குத் தந்தையின் எளிமையுடன், ஒரு நாயகனின் வசீகரத்தையும் கொண்டிருந்தார் அமீன்.

விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் பகிரும் படங்களில் பெரும்பாலானவை, அதில் இடம்பெற்றிருக்கும் நயன்தாராவுக்காகவே அதிகம் இணையத்தில் பகிரப்படும். இந்த முறை அந்த இடத்தை அமீன் அபகரித்துக்கொண்டார்.

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in