கலக்கியெடுத்த காஸ்ட்லி தக்காளி!

கலக்கியெடுத்த காஸ்ட்லி தக்காளி!

கடந்த வாரத்தில் இணையத்தில் மட்டுமல்ல... எங்கு திரும்பினாலும் தக்காளி பற்றிய பேச்சுதான். தொடர்மழையால் கிலோ தக்காளி 100 ரூபாயைத் தாண்டியதால், மக்கள் தக்காளி வாங்குவதற்கே யோசிக்க வேண்டிய நிலை உருவானது. ஆனால், சமூக வலைதளங்களில் இந்த நெருக்கடியையும் கிண்டலாக மீம்களும் பதிவுகளும் போட்டு என்ஜாய் செய்தனர் நெட்டிசன்கள்.

ஹெல்மெட் வாங்கினால் கிலோ தக்காளி இலவசம். திருமணத்தில் மணமக்களுக்கு தக்காளி பரிசு. தக்காளி வாங்க லோன் விண்ணப்பித்தது, தக்காளிக்கு பிரியாணி என சுவாரஸ்யமான கிண்டல் செய்திகளும் சுற்றின. சிலர் வித்தியாசமாக, தக்காளி இல்லனா புளியும், எலுமிச்சையும் பயன்படுத்தலாமே என்று ஆலோசனையெல்லாம் வழங்கினர். “போடா தக்காளித் தொக்கு” என்று திட்டியவர் மீது கோபப்படாமல், “என்ன அண்ணே... இன்னிக்கு காஸ்ட்லியா திட்டுற” என்று சொல்லும் அளவுக்கு தக்காளி விலை உயர்வு கடந்த வாரத்தை காஸ்ட்லியாகவும், காமெடியாகவும் கடத்தியது.

வேளாண் சட்டங்களை நாட்டு மக்களுக்காகத் திரும்பப் பெறுகிறோம்! - அண்ணாமலை

ஒரு கமா கூட மாத்த முடியாதுன்னு சொன்னீங்க... ஓ.! அது போன மாசமா?

-ஷிவானி சிவக்குமார்

கடனைச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியவர்களை சும்மாவிடமாட்டோம். - நிர்மலா சீதாராமன் ஆவேசம்

அதெப்படிங்க மேடம், தேர்தல் நேரத்துல மட்டும் கரெக்டா ஆவேசம் வருது?

- பா.சக்திவேல்

நாட்டையே ஆளத் துடிக்கிற எனக்கு சொந்த வீடு இல்லை என்பது வரலாற்றில் எவ்வளவு பெரிய துயரம்? - சீமான்

சொந்த வீடு வாங்கத்தான் நாட்டையே ஆளத் துடிக்கிறீங்களா அண்ணே..?!

- மயக்குநன்

மதிமுகவில் தலைமைக் கழகச் செயலாளர் துரையின் பணிகள் என்னென்ன என வைகோ அறிவிப்பு.

வாரிசு அரசியலுக்கு எதிராகப் போராட்டம் பண்ணுவதும் அதில் ஒரு பணிங்களா?

- அமுது

தற்போது உத்தர பிரதேசத்தில் கலவரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. - யோகி ஆதித்யநாத்

பின்ன, அவங்க ஊர்லயும் எலெக்‌ஷன் வரும்ல..?

- சரவணகவி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in