இணைய உலகம்: ஒரே ஓட்டில் உலக ஃபேமஸ்!

இணைய உலகம்: ஒரே ஓட்டில் உலக ஃபேமஸ்!

இணையத்தில் இந்த வாரத்தின் பிரதான ட்ரெண்டிங், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்தான். அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளை நல்லாவே வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 147 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் ஒன்றை மட்டுமே அதிமுக வென்றது. 1,406 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 211 மட்டுமே அதிமுகவுக்கு. இதனால் அதிமுக, தமிழகத்தில் அதற்கான இடத்தை இழக்கத் தொடங்கியிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். தேமுதிக, அதிமுகவை விடவும் மோசமாக உள்ளது. பிற கட்சிகள் ஓரளவுக்கு வெற்றி வாய்ப்புகளைப் பெற்ற நிலையில் பாஜக, நாம் தமிழர் கட்சியும் ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. கோவையில் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜகவின் கார்த்தி, ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்று ஒரேநாளில் உலக ஃபேமஸ் ஆகியிருக்கிறார். இதனால், ‘ஒத்த ஓட்டு பாஜக’ என்று சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் மூலம் நெட்டிசன்கள் கிண்டலடித்தார்கள். ஒருத்தன்கூட பிஜேபிக்கு ஓட்டுப்போட மாட்டான்னு இனி யாராச்சும் சொல்லுவாங்க?

ஒரேநாளில் ஒரு செடி பூத்துவிடாது; படிப்படியாகத்தான் கட்சி வளரும்! - சீமான்

10 வருசமாச்சி செடி வச்சு... இன்னும்தான் பூ பூக்குது..?

- மித்ரன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு திமுக அரசுதான் காரணம். - அர்ஜுன் சம்பத்.

பாவம்... ஸ்டாலின்தான் இந்தியப் பிரதமர்னு அண்ணன் நெனச்சிட்டு இருக்கார் போல!

- மயக்குநன்

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். அது வரும்,போகும். - விஜய் பிரபாகரன்

வந்த மாதிரி தெரியலையே... விடாம போயிட்டேல இருக்கு!

-இதயவன்

‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக்கனலை ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் ராட்டுகிறேன். - கமல்ஹாசன்

பிக்பாஸ் வீட்டுல இருக்கறவங்கள பாராட்டுற மாதிரியே இருக்கு ஆண்டவரே...

- தமிழன்டா

கவர்னருடன் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சந்திப்பு - செய்தி

அண்ணா அந்த ஒத்த ஓட்டு சமாச்சாரமா புகார் அளிச்சிருப்பாரோ?

-நெல்லை அண்ணாச்சி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in