இணைய உலகம்: சீமானை குத்தகை எடுத்த நெட்டிசன்கள்!

இணைய உலகம்:
சீமானை குத்தகை எடுத்த நெட்டிசன்கள்!

நாட்டில் நிலவும் தலையாய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகிறார் சீமான். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்பவர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசிய செந்தமிழனை, நெட்டிசன்கள் மொத்தமாய் குத்தகை எடுத்து வறுத்துக்கொண்டிருக்கிறார்கள். விவசாய கூலி தொழிலாளர்களை சோம்பேறிகள், குடிகாரர்கள் என்று பேசிய சீமானுக்கு மக்கள் கொடுத்த பதிலடி வீடியோக்களும் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கின்றன. மன்னிப்புக் கேட்கும்வரை விடமாட்டார்கள் போலிருக்கிறது. “இவரு தெரிஞ்சேதான் இப்படியெல்லாம் பேசறாரா... ஒவ்வொரு தடவையும் எக்குத்தப்பான எதிர்வினைகளை சந்திச்சாலும் மறுபடி மறுபடி வான்ட்டடா போய் விழுந்து வம்பை வளக்குறாரே” என்று கவலைகொள்கிறார்கள் செந்தமிழனின் தம்பிகள்!

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.