இணைய உலகம்: சர்ச்சையில் சிக்கிய சந்தானம்!

இணைய உலகம்:
சர்ச்சையில் சிக்கிய சந்தானம்!

‘வண்டுருட்டான் தலையா’ என்பதில் ஆரம்பித்து, ‘பன்னிமூஞ்சி வாயா’ வரைக்கும் தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நகைச்சுவை என்ற பெயரில், உருவ கேலி தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் குமுறுகிறார்கள். ஆனாலும் எந்த மாற்றமும் இதுவரையிலும் நடந்ததாகத் தெரியவில்லை. சமீபத்தில் சந்தானம் நடித்து ஓடிடியில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தில், மாற்றுத்திறனாளி கேரக்டரை அடிக்கடி கேலி செய்யும்படியான நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பது, இணையத்தில் பெரும் சர்ச்சையானது. தற்காலிக காயங்களையே தாங்கிக் கொள்ள முடியாத மக்களுக்கு மத்தியில், காலம் முழுவதும் உடலிலும் மனதிலும் காயங்களை அனுபவிக்கும் மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையில் காட்சியும், வசனமும் வைத்திருப்பது குறித்து பரவலாக கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பெண் சுதந்திரம், ஆடை சுதந்திரம் குறித்து இந்தப் படத்தில் வரும் வசனங்கள் தொடர்பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதையெல்லாம் கண்டித்து சமூக வலைதளங்களில் சந்தானத்துக்கு எதிராக நெட்டிசன்கள் குமுறிவருகின்றனர்.

* * * * * * * *

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.