மாதம் ரூ.41 லட்சம் வெகுமதி: இந்திய பயனர்களுக்கு அள்ளிவிடும் சமூக ஊடகம்

மாதம் ரூ.41 லட்சம் வெகுமதி: இந்திய பயனர்களுக்கு அள்ளிவிடும் சமூக ஊடகம்

இளசுகள் மத்தியில் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்று ஸ்னாப்சாட். தனது இந்திய ஆளுகையை விரிவுபடுத்தும் நோக்கில், இளம் படைப்பாளர்களை ஈர்க்கும் புதிய அறிவிப்பினை ஸ்னாப்சாட் வெளியிட்டுள்ளது. அதற்காக மாதம் ரூ.41 லட்சம் ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு என்பதற்கு அப்பாலும் சமூக ஊடகங்கள் பயனருக்கு பலவகையிலும் பயனளித்து வருகின்றன. படைப்பாளராகவும் தங்களை முன்னிறுத்துவோருக்கு அவை வெகுமதியையும் அளித்து வருகின்றன. யூட்யூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் வாயிலாக மாதாந்திரம் லட்சங்களில் சம்பாதிக்கும் இந்தியர்கள் அதிகரித்துள்ளனர்.

ஒட்டுமொத்த மக்கள் தொகை மட்டுமன்றி உலகளவில் அதிக இளம்வயதினரை உள்ளடக்கிய இந்தியாவை, பெரும் வணிக சந்தையாக சமூக ஊடகங்கள் பார்க்கின்றன. இந்த வகையில் பயனர்கள ஈர்க்கவும், தக்கவைக்கவும் பல்வேறு முயற்சிகளை அவை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க சமூக ஊடக செயலியான ஸ்னாப்சாட், இந்திய பயனர்களுக்காக புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஸ்னாப்சாட்டில் ‘சவுண்ட்ஸ்’ என்ற அம்சத்தின் கீழ் இசையை பரிமாறும் வசதி உண்டு. இதில் பதிப்புரிமை பெற்ற இசை மட்டுமன்றி சுயாதீன படைப்பாளர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். அந்த வகையில் பங்கேற்போரில் தலா 2,500 அமெரிக்க டாலர் என மாதந்தோரும் 20 படைப்பாளர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என ஸ்னாப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வகையில் சுமார் ரூ41 லட்சம் தொகையை மாதாந்தோறும் வாரிவழங்க ஸ்னாப்சாட் முன்வந்திருக்கிறது. நவம்பர் மத்தியிலிருந்து இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வருவதாகவும் ஸ்னாப் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஸ்னாப் என்பதன் கீழ் கடைபரப்பியிருக்கும் ஸ்னாப்சாட், படங்கள், காணொலிகள், வழக்கமான தகவல்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்வதுடன், டேட்டிங் செயலியாகவும் பிரபலமடைந்து வருகிறது. அண்மையில் அறிமுகமான இதன் வெப் வெர்சன்ம் பயனர்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in