ஆபாச நடிகர் ஜானி சின்ஸ் உடன் மீண்டும் இணைந்த ரன்வீர் சிங்... இரண்டாவது விளம்பரமும் மெகா ஹிட்

ரன்வீர் சிங் - ஜானி சின்ஸ்
ரன்வீர் சிங் - ஜானி சின்ஸ்

ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் உடன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இரண்டாம் முறையாக இணைந்திருக்கும் விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் சார்ந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் விளங்குகிறார். தனிப்பட்ட வகையில் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் ரன்வீர் சிங், அதற்கு அடுத்தபடியாக பாலியல் பொருட்களுக்கான வணிக விளம்பரங்கள் குறித்த சர்ச்சையில் விழுந்தார்.

ஆண்களின் பாலியல் குறைபாடுகளை தீர்ப்பதாக உறுதியளிக்கும் பிராண்ட் ஒன்றை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதற்காக, அமெரிக்க ஆபாச பட நடிகரான ஜானி சின்ஸ் என்பவரை ரன்வீர் சிங் இந்தியாவுக்கு வரவழைத்தார். இருவரும் இணைந்து தோன்றும் விளம்பரங்கள் ரசிக்கவும், நகைக்கவும், வியக்கவும் செய்திருக்கின்றன. மொத்தத்தில் விளம்பர படத்தின் நோக்கத்தை செவ்வனே தீர்த்திருக்கின்றன.

முதல் விளம்பரத்தை வழக்கமான மெகா சீரியல் காட்சியாக சித்தரித்து, அதனூடே இலைமறை காயாக பாலியல் ஆரோக்கிய பிராண்டுக்கும் விளம்பரம் சேர்த்திருந்தனர். இதற்கு பொதுவெளியில் வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர கிடைத்தது. ரன்வீர் சிங் தனது தனிப்பட்ட வருமானத்துக்காக, ஆபாசா பட நடிகருடன் இணைந்து தனது ரசிகர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறார் என பலரும் அதிருப்தி தெரிவித்து இருந்தனர்.

மாறாக, இந்தியா போன்ற பாலியல் விழிப்புணர்வு அறவே இல்லாத தேசத்தில், வணிக நோக்கிலேனும் அவற்றை பொதுதளத்தில் விவாதத்துக்கு உள்ளாக்குவது குறிப்பிடத்தக்க மாற்றம் என கணிசமானோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதற்கிடையே இன்று இணையத்தில் வெளியான இரண்டாவது விளம்பரத்திலும், ஜானி சின்ஸ் உடன் ரன்வீர் சிங் இணைந்து ரசிகர்களை கலகலக்க வைத்துள்ளனர். தொலைக்காட்சிகளின் வழக்கமான டெலிஷாப்பிங் உத்தியில் ’ஆண்கள் பாலியல் ஆரோக்கியம்’ சார்ந்த தனது பிராண்டுக்கு ரன்வீர் சிங் விளம்பரம் தேடியுள்ளார்.

முந்தைய விளம்பரத்தை விட தற்போது வெளியாகி இருப்பது, கூடுதல் ரசனையோடும் அப்பட்டமான கருத்துக்களோடு, நகைச்சுவை தெறிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று இந்த விளம்பரம் இணையத்தில் வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கிலான பார்வைகளை சென்று சேர்ந்திருக்கிறது. வழக்கமான வசைகளுக்கு அப்பால், ’பிற்போக்கான தேசத்தின் சமூகத் தடைகளை உடைத்து ஆண்களின் பாலியல் நல்வாழ்வு குறித்தான வெளிப்படையான உரையாடல்களுக்கு ரன்வீர் சிங் வாய்ப்பளித்துள்ளதாக’ அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in