வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் வரிசையில், ஃபேஸ்புக், மெசஞ்சரிலும் பிராட்காஸ்ட் சேனல் அமலாகிறது!

மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக்
மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக்

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப்பில் அறிமுகமான பிராட்காஸ்டிங் சேனல் வசதி, பேஸ்புக் மற்றும் மெசஞ்சரிலும் அமலாகின்றன என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

தங்களைப் பின்தொடர்பவர்கள் அல்லது நட்பு வட்டத்தில் உள்ள அனைவரையும் ஒரே நேரத்தில் தொடர்புகொள்ளவும், எதிர்வினைகளைப் பகிரவும், வாக்கெடுப்பில் பங்கேற்கச் செய்யவும், சமூக வலைதள பயனர்களுக்கு பிராட்காஸ்டிங் சேனல்கள் உதவுகின்றன. ஒருவழிப் பாதையான இந்த சேனல்கள் வசதியை மெட்டா நிறுவனம் முதலில் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் அறிமுகம் செய்தது.

மெட்டா
மெட்டா

இதன் தொடர்ச்சியாக ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சரிலும் பிராட்காஸ்டிங் வசதியை அமல்படுத்துவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சோதனை ஓட்டமாக புழக்கத்தில் இருக்கும் இந்த வசதிகளை மெட்டா நிறுவனத்தினர் நேற்று முன்தினம் உறுதி செய்துள்ளனர்.

குறிப்பாக ஃபேஸ்புக் பக்கங்களை நிர்வகிப்போருக்கு இந்த பிராட்காஸ்டிங் சேனல்கள் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என மெட்டா தெரிவிக்கிறது. பிராட்காஸ்டிங் சேனல்கள் அனுகூலத்தை தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் என பல தரப்பினரும் பயன்படுத்தலாம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே இந்த வசதி மூலம் தங்களை பின்தொடர்பவர்களோடு இணைப்பில் உள்ளன.

இன்ஸ்டாகிராமின் பிராட்காஸ்டிங் சேனல்
இன்ஸ்டாகிராமின் பிராட்காஸ்டிங் சேனல்

பாலிவுட் நட்சத்திரங்களான ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஷில்பா ஷெட்டி போன்றோரும் சேனல்கள் வசதி மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதோடு, தங்களைக் குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் பின்தொடர்வோருக்கு தெரிவித்து வருகின்றனர். டெலகிராம் தொடங்கிய இந்த பிராட்காஸ்டிங் வசதி வரவேற்பு பெற்றதை அடுத்து, இதர சமூக வலைதளங்களும் படிப்படியாக பிராட்காஸ்ட் சேனல் அனுகூலங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!

மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!

லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!

வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in